அறும்கபே பகுதிக்கு பாதுகாப்புச் செயலாளர் விஜயம்

அறும்கபே பகுதிக்கு பாதுகாப்புச் செயலாளர் விஜயம்

அறுகம்பே பகுதியின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை தொடர்பில் ஆராய்வதாக பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு பெற்ற) சம்பத் துய்யகொந்த அப்பகுதிக்கு இன்று (10.11) விஜயம் மேற்கொண்டிருந்தார்.

அண்மையில் அறுகம்பே வளைகுடா பகுதியில் உள்ள பிரபல சுற்றுலாத் தலங்களை இலக்குவைத்து தாக்குதல் நடத்தப்படும் என கிடைத்த தகவலுக்கமைய மறு அறிவித்தல் வரை அந்த பகுதிக்கு செல்ல தங்கள் பிரஜைகளுக்கு அமெரிக்க தூதரகம் பயணத்தடை விதித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து பிரித்தானியா, நியூசிலாந்து, கனடா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தமது நாட்டு பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்தன.இதேவேளை, அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசனையை மேற்கோள் காட்டி இலங்கையின் கிழக்கு மற்றும் தெற்கு கரையோரங்களிலிருந்து இஸ்ரேலியர்களை வெளியேறுமாறு இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு சபை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதன்பின்னர் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி அறுகம்பே உள்ளிட்ட பல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது ஃபர்ஹாத் ஷகேரிக்கு இஸ்லாமிய புரட்சிகர காவற்படை (IRGC) மூலம் இலங்கையில் உள்ள இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைக்க அறிவுறுத்தப்பட்டதாகவும் அறுகம்பே பகுதியில் பாரிய துப்பாக்கிச் சூடு நடத்த திட்டமிட்டிருந்தாகவும் அமெரிக்க நீதித்துறை அறிவித்ததையடுத்து பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு பெற்ற) சம்பத் துய்யகொந்த அப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்து.

Social Share

Leave a Reply