எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பின் போது, வாக்காளர்களின் சிறிய விரலில் மை பூசப்பட மாட்டாது எனவும் இடது கையின் ஆள்காட்டி விரலில் மை பூசப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் இடது கையின் சிறிய விரலுக்கு மை பூசப்பட்ட நிலையில் பலருக்கு இன்னும் மை அடையாளங்கள் இருப்பதால் இம்முறை இடது கையின் ஆள்காட்டி விரலை குறியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நவம்பர் 14 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான அனைத்து முதற்கட்டப் பணிகளும் நிறைவடைந்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
10 ஆவது பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் 17,140,354 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.