ஆட்சியை கைப்பற்ற தேவையான ஆசனங்கள் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்தன

பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் அண்ணளவாக 70 சதவீதம் வெளியாகியுள்ள நிலையிலேயே ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸாநாயக தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சியை கைப்பற்ற தேவையான 113 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின் படி தேசிய மக்கள் சக்தி 123 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 31 ஆசனங்களையும், இலங்கை தமிழரசுக் கட்சி 6 ஆசனங்களையும், புதிய ஜனநாயக முன்னணி03 ஆசனங்களையும் , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இரண்டு ஆசனங்களையும் வென்றுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி ஒரு ஆசனத்தை வென்றுள்ளது. வன்னியில் இலங்கை தொழிலாளர் கட்சி, ஜநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய தலா ஒவ்வொரு ஆசனத்தையும், யாழ்ப்பாணத்தில் வைத்தியர் அர்ச்சுனா தலைமையிலான சுயேட்சைகுக்குழு 17 மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகியன தலா ஒவ்வொரு ஆசனத்தையும் வென்றுள்ளன. மட்டக்களப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையும் வென்றுள்ளது..

Social Share

Leave a Reply