வவுனிய, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி தேர்தல் மாவட்டத்தின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் விருப்பு வாக்குகள் எண்ணும் பணிகள் நிறைவடைந்துள்ளன. தேர்தல் திணைக்களம் உத்தியோகபூர்வமாக இதுவரை அறிவிக்காத நிலையில் வவுனியா வாக்கு எண்ணும் நிலையத்திலிருந்து கிடைத்த முடிவுகளின் படி தேசிய மக்கள் சக்தி சார்பில் செல்லத்தம்பி திலகநாதன், மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். விருப்பு வாக்கு முக்கியமல்ல, கட்சிக்கு வழங்கும் வாக்குகளே முக்கியம் என்ற கோட்பாட்டை தேசிய மக்கள் சக்தி கொண்டிருந்த நிலையில் விருப்பு வாக்குகள் எண்ணும் பணியில் கடும் போட்டி ஒன்று நிலவியதாக அறிய முடிகிறது.
ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக ரிஷாட் பதியுதீன், இலங்கை தொழிலாளர் கட்சி சார்பாக காதர் மஸ்தான், இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக ரவிகரன், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பாக செல்வம் அடைக்கலநாதன் ஆகியயோர் வன்னியில் வெற்றி பெற்றுள்ளனர். இம்முறையில் வன்னியிலிருந்து மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
செல்லத்தம்பி திலகநாதன், மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், ரவிகரன் ஆகியோரே இவ்வாறு புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.