சீரற்ற வாநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களால் இதுவரை நால்வர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் 9 பேர் காயமடைந்துள்ளதுடன் அறுவர் காணாமற் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்தவ நிலையத்தின்
பணிப்பாளர் நாயகம் உதய ஹேரத் தெரிவித்துள்ளார்.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 66,947 குடும்பங்களைச் சேர்ந்த 230, 743 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தேவைப்படும் பட்சத்தில் கிழக்கு மாணத்தில் மேலும் பல நலன்புரி முகாம்களை அமைக்க தயாராகவிருப்பதாக
மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.
இன்று (27.11) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.