கெடுபிடிகளின்றி மாவீரர் தினம் அனுஷ்டிப்பு

வடக்கு, கிழக்கின் பல பகுதிகளில் கொட்டும் மழைக்கும் மத்தியிலும், வெள்ளத்துக்கு மத்தியிலும் மாவீரர் தினம் தமிழ் மக்களால் நேற்று(28.11) அனுஷ்டிக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த நிககழ்வுகளில் கலந்து கொண்டனர்.

ஈகை சுடர் ஏற்றி உணர்வு பூர்வமாக இந்த நிகழ்வுகள் நடைபெற்றன. கலந்து கொண்ட மக்கள் தங்கள் உறவினர்களுக்காக சுடர் ஏற்றி நினைவுகூரந்தனர். கடந்த காலங்களில் மாவீரர் தின நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்படுவது, பொலிஸார், இராணுவத்தினர் இடையூறுகள் வழங்கியதாக பல குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில் இம்முறை அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறவில்லை. அரசாங்க மாற்றம் இதற்கான காரணம் என நம்பப்படுகிறது. அரசாங்கம் அனுமதியை வழங்காத போதும், தடையை ஏற்படுத்தவில்லை. அத்தோடு மாவீரர் தின நிகழ்வுகளுக்கு அரசாங்கம் இடையூறாக இருக்காது என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் அண்மையில் தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Social Share

Leave a Reply