அமைச்சுக்களின் அதிசொகுசு வாகனங்களை ஏலத்தில் விட அரசாங்கம் தீர்மானம்

அமைச்சுக்களின் அதிசொகுசு வாகனங்களை ஏலத்தில் விட அரசாங்கம் தீர்மானம்

அமைச்சுக்களுக்குச் சொந்தமான சுமார் 254 அதி சொகுசு வாகனங்களை ஏலம் விடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அமைச்சரவை, அரசாங்க மதிப்பீட்டாளரின் சான்றிதழைப் பெற்று சொகுசு வாகனங்கள் ஏலம் விடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பொது பாதுகாப்பு மற்றும்
நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இந்த சொகுசு வாகனங்களைப் பராமரிக்க அரசாங்கம் பாரிய செலவைச் சுமக்க வேண்டியுள்ளதுடன், இவற்றில் பெரும்பாலானவை முன்னாள் அமைச்சர்களே பயன்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வரியில்லா வாகன அனுமதிப்பத்திரம் வழங்குவதையும் அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது.

அத்துடன், 5 வருடங்களின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் ஆராயக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply