டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் 858 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த வருடத்தின் இதுவரையான , காலப்பகுதியில் 46,385 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மேல் மாகாணத்தில் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் 19,927 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மேலும், வடமாகாணத்தில் யாழ். மாவட்டத்தில் 5,089 நோயாளர்களும் மத்திய மாகாணம் கண்டி மாவட்டத்தில் 4,974 நோயாளர்களும், சப்ரகமுவ மாகாணம், கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் 4,623 நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 23 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.