இலங்கை வரலாற்றில் முதன்முறையாக கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 14,000 புள்ளிகளைக் கடந்துள்ளது.
அதன்படி, இன்றைய தினம் 150.72 புள்ளிகளைப் பெற்று அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 14,035.81 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.
அத்துடன் எஸ் அன்ட் பி எஸ்எல் 20 பங்கு விலைச் சுட்டெண் 4,186 புள்ளிகளைப் பதிவு செய்துள்ளது.
இதற்கமைய இன்றைய தினம் 7.35 பில்லியன் ரூபாய் மொத்த புரள்வாக பதிவாகியுள்ளது.