கொழும்பு கஹதுடுவ, பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து நான்கு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஒரு கிலோ
ஐஸ் போதைப்பொருளுடன் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று (12.13) கைது செய்யப்பட்டதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகபர்கள் கிருலப்பனை பிரதேசத்தை வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.