வெள்ளவத்தையில் கொக்கெய்ன் மற்றும் குஷ் போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலிங்வூட் மாவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் 36 கிராம் கொக்கெய்ன் மற்றும் 203 கிராம் குஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 1,875,000, ரூபாயும் இதன்போது கைப்பற்றப்பட்டது.
ஐந்து கையடக்கத் தொலைபேசிகள், பணம் எண்ணும் இயந்திரம், இரண்டு வங்கி அட்டைகள் மற்றும் இலத்திரனியல் தராசு என்பனவும் கைப்பற்றப்பட்டன.
சந்தேகநபர்கள் தெஹிவளை, மட்டக்குளி மற்றும் கொழும்பு 14 பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்