”ஜனாதிபதியின் கொடுப்பனவு” என்ற பெயரில் வெளியாகும் தகவல் போலியானது

''ஜனாதிபதியின் கொடுப்பனவு'' என்ற பெயரில் வெளியாகும் தகவல் போலியானது

”ஜனாதிபதியின் கொடுப்பனவு” என்ற பெயரில் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக வௌியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்தகைய வேலைத்திட்டம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் தற்போது உண்மைக்கு புறம்பான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரசாங்க உதவி வேலைத்திட்டம் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படுமாயின், அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் ஊடாக பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இது தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவல்களைப் பகிர்வதை தவிர்க்குமாறு அரசாங்கம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

Social Share

Leave a Reply