தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாளில் 3 வினாக்கள் கசிந்த சம்பவம் தொடர்பான விரிவான விசாரணை அறிக்கையை நாளை காலை 9 மணிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உயர்நீதிமன்றம் இன்று (18.12) உத்தரவிட்டுள்ளது.
ஐந்தாம் தர புலமைப்பரிசில் முதலாம் தாளில் 3 வினாக்கள் கசிந்த நிலையில் குறித்தப் பரீட்சையை மீள நடத்துவதற்கான உத்தரவைப் பிறப்பிக்குமாறு பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட 4 அடிப்படை உரிமை மனுக்கள் இன்று காலை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிபதிகளான யசந்த கோதாகொட, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.