கொட்டகலையில் லயன் குடியிருப்பொன்றில் தீ விபத்து

கொட்டகலையில் லயன் குடியிருப்பொன்றில் தீ விபத்து

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட கொட்டகலை டிரேட்டன் தோட்டம் கே.ஓ பிரிவில் 10 வீடுகள் கொண்ட 6ஆம் இலக்க தொடர் லயன் குடியிருப்பில் இன்று (18.12) முற்பகல் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒரு வீடு தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், ஏனைய மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமாகியுள்ளன.

இந்த நான்கு வீடுகளிலும் இருந்த 22 பேர் தற்காலிகமாக உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வீட்டில் இருந்த பெருமளவிலான உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், மற்றும் பாடப் புத்தகங்கள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.

மேலும், இவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகத்தின் ஊடாக வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply