இலங்கை கடற்பரப்பில் பெருமளவான நபர்களை ஏற்றிச் சென்ற படகு ஒன்றை இலங்கை கடற்படையினர் இன்று (19.12) கண்டுபிடித்துள்ளனர்.
முல்லைத்தீவு கடற்பரப்பிலேயே படகு கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை கடற்படை பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்தார்.
படகில் இருந்தவர்கள் தொடர்பிலான சரியான தகவல்கள் கண்டறியப்படாத நிலையில் படகை ஆய்வு செய்வதற்காக இலங்கை கடற்படை படகுகள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்
எவ்வாறாயினும், படகில் மியான்மாரில் இருந்து அகதிகளாக வந்த 103 பேர் இருந்ததாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.