கஸகஸ்தானில் 67 பயணிகள் உட்பட 72 பேருடன் சென்ற பயணிகள் விமானம் கீழே விழுந்து நொறுங்கியுள்ளது.
அஜர்பைஜானின் பாகுவில் இருந்து ரஷ்யாவுக்கு 72 பேரை ஏற்றிக்கொண்டு பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. கஜகஸ்தானில் அக்டாவ் பகுதியில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.
விமானி நீண்ட நேரம் முயற்சி செய்தும் விபத்தை தவிர்க்க முடியவில்லை.
பயணிகள், விமானிகள் என மொத்தம் 72 பேருடன் சென்ற விமானம் கீழே விழுந்து தீப்பற்றி எரியும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
விமானத்தில் 67 பயணிகள், 5 ஊழியர்கள் இருந்த நிலையில் அவர்களின் கதி என்ன என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.
மீட்பு பணி தொடங்கி இடம்பெற்று வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.