2004 ஆம் ஆண்டு உலகில் பாரிய சேதங்களை ஏற்படுத்திய சுனாமி பேரலை அனர்த்தத்தின் 20 ஆம் வருட நினைவேந்தல் மன்னார் மாவட்டச் செயலகத்திலும்
இன்றைய தினம்(26.12) இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் கே.திலீபன் தலைமையில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது.
இதன்போது உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து தீபம் ஏற்றி மலர் தூவி,சர்வமத தலைவர்களின் பிரார்த்தனைகளுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது.
குறித்த நிகழ்வில்,மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் மற்றும் திணைக்கள தலைவர்களும், சர்வ மதத் தலைவர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்