அஸ்வெசும நிலுவைத் தொகையை இன்று முதல் வங்கிக் கணக்குகளில்

அஸ்வெசும நிலுவைத் தொகையை இன்று முதல் வங்கிக் கணக்குகளில்

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் முதலாம் கட்டத்தில் தகுதி பெற்ற பயனாளர் குடும்பங்களுக்கான நிலுவைத் தொகையை இன்று (27.12) முதல் பெற்றுக் கொள்ள முடியும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி இதுவரையில் செலுத்தப்படாத நிலுவைத் தொகையை அவர்களின் வங்கிக் கணக்கில் வைப்பிலிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் முதலாம் கட்டத்தில் தகுதிபெற்ற 2 இலட்சத்து 12,423 குடும்பங்களுக்கான 13 கோடியே 14 இலட்சத்து 7,750 ரூபாய் நிலுவைத் தொகை, இன்றையதினம் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளன.

அதன்படி இன்றையதினம், குறித்த அஸ்வெசும பயனாளர்கள் வங்கிகளிலிருந்து நலன்புரி கொடுப்பனவைப் பெற்றுக் கொள்ள முடியும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply