பொலிஸ் அதிகாரிகளுக்கு பரிசுப் பொருட்கள் வழங்க தடை

பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு, பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பரிசுப் பொருட்கள் வழங்குவதற்கு தடை விதித்துள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியா அறிவித்துள்ளார். புதுவருடம், சிங்கள, தமிழ் புத்தாண்டு அடங்கலாக முக்கிய நிகழ்வுகளின் போது பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பரிசுப் பொருட்கள் வழங்குவது கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ளது. ஆனால் இனி அவ்வாறு செய்ய வேண்டாம் எனவும், குறிப்பாக பொலிஸ் உயர் அதிகாரிகள் அவ்வாறான பரிசுப் பொருட்களை ஏற்றுக்கொள்ள வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நடைமுறையை சிவில் நிர்வாக அதிகாரிகளும் கடைபிடிக்க வேண்டுமெனவும் மேலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் அடங்கலாக மேலதிகாரிகளிடம் வாழ்த்துக்கள் பெற விரும்பினால் நேரில் சந்திக்க வேண்டிய தேவை இல்லை என்றும், தொலைபேசி அழைப்புகள் மற்றும் வட்ஸ் அப் மூலம் பகிர்ந்து கொள்ளலாம் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறைகளை மீறுபவர்கள் தொடர்பில் அவதானிக்குமாறு பணிக்கப்பட்டுள்ள அதேவேளை, மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply