பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பு குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம்

பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பு குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம்

பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பிற்காக பயணிகளின் உரிமைகள் பட்டியலை தயாரிக்கத் தொடங்கியுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி பஸ்களுக்கான தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் வழங்கப்படும் பயண அனுமதிப்பத்திரத்தில் உள்ள அனைத்து நிபந்தனைகளையும் மாகாண சபைகளின் பஸ் அனுமதிப்பத்திரம் வழங்குவதில் உள்ள நிபந்தனைகளையும் உள்ளடக்கி பயணிகளின் உரிமை பட்டியல் தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயங்கள் தொடர்பில் பஸ் சங்கங்கள் மற்றும் பயணிகள் சங்கங்களுடன் கலந்துரையாடி இறுதித் தீர்மானத்தை எட்டவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply