தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 16,000 இற்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய மகத்தான திரையிசை பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன் தனது 80 ஆவது வயதில் காலமானார். .
கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், அவர் உயிரிழந்தார்.
அவரது தந்தையை பின்பற்றி இசை பயின்று, அதில் தேர்ச்சி பெற்றார். விலங்கியலில் இளங்கலை பட்டம் பெற்ற அவர், சென்னையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பாடியதன் மூலம் திரைப்படத்துக்கு பாடும் வாய்ப்பை பெற்றார்.