இம்மாதம் முதல் இலத்திரனியல் அடையாள அட்டை

இம்மாதம் முதல் இலத்திரனியல் அடையாள அட்டை

இலத்திரனியல் அடையாள அட்டைகளை இம்மாதம் முதல் வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இன்று (14.01) இதனைத் தெரிவித்துள்ளார்.

புதிதாக வழங்கப்படும் அனைத்து அடையாள அட்டைகளும் இலத்திரனியல் மயமாக்கப்படும் என நம்புவதாகவும் அடையாள அட்டைகளைப் பெறுவதில் ஏற்கனவே குறிப்பிடத்தக்க தாமதம் ஏற்பட்டுள்ளதால், அதைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இலத்திரனியல் அடையாள அட்டை முறையை உருவாக்குவதற்கு சுமார் 20 பில்லியன் ரூபாய் செலவாகும் என்பதால், அதில் பாதியை இந்திய உதவி மூலம் பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply