சீமெந்து பை ஒன்றின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. சீமெந்துக்கான செஸ் வரி குறைக்கப்பட்டுள்ளமையினால் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நிதியமைச்சின் அதிகாரிகளினால் சீமெந்துக்கான செஸ் வரியை குறைப்பதற்கான கட்டளையை வழங்கிய நிலையில். பாராளுமன்ற பொது நிதிக்குழு அதற்கான அனுமதியை வழங்கியது.
ஹர்ஷ டி’சில்வா தலைமையிலான பாராளுமடன்ர பொது நிதிக்குழு அண்மையில் கூடிய வேளையில், செஸ் வரி தொடர்பிலான விடயங்கள் ஆராயப்பட்டதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.