ஐ.தே.க – ஐக்கிய மக்கள் சக்தி இணைவு பேச்சுவார்த்தைக்கான குழு

ஐ.தே.க - ஐக்கிய மக்கள் சக்தி இணைவு பேச்சுவார்த்தைக்கான குழு

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி இணைந்து செயற்படுவது தொடர்பில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட ஐக்கிய மக்கள் சக்தி ஐந்து பேரடங்கிய குழுவை நியமித்துள்ளது.

நேற்று(16.01) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். அவரின் தலைமையில் ஐவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாசாவுக்கு தலைமை பொறுப்பை விட்டுக்கொடுத்தால் ஒரே அணியாக செயற்பட தயாராக இருபப்தாக ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா கடந்த நவம்பர் மாதம் 24 ஆம் திகதி தெரிவித்திருந்தார். ரணில் நாடு திரும்பியதும் இந்த விடயம் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென கூறியிருந்தார்.

“அரசாங்கத்துக்கு எதிராக அனைவரும் இணைந்து எதிர்த்து நிற்பது தொடர்பில் பேசப்பட்டதாகவும், உள்ளூராட்சி தேர்தலில் அனைத்து கட்சிகளும் இணைந்து செயற்படுவது தொடர்பில் பேசப்பட்டது” என நேற்றைய ஐக்கிய மக்கள் சக்தி கூட்டத்தின் பின்னர் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply