
2025 ஆம் ஆண்டுக்கான தெற்காசிய விவசாய உச்சி மாநாடு கடந்த 15 ஆம் திகதி கொழும்பு ஷங்ரி-லா ஹோட்டலில் மேல் மாகாண ஆளுநர் ஹனிஃப் யூசுப் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார். இந்திய துணைக் கண்ட வேளாண் அறக்கட்டளை (BSAF) ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில், பிராந்தியத்தில் விவசாய வர்த்தகம் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த 30க்கும் மேற்பட்ட கொள்வனவாளர்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
மேல் மாகாண ஆளுநர் ஹனிஃப் யூசுப் தனது சிறப்புரையில், உலகளாவிய விவசாய வர்த்தகத்தில் இலங்கையின் முக்கிய பங்களிப்பு குறித்து தனது உரையில் கருத்து வெளியிட்ட ஹனிஃப் யூசுப் , குறிப்பாக தேயிலை, கறுவா, ரப்பர் மற்றும் தேங்காய் பொருட்கள் மூலம் 2024 ஆம் ஆண்டில் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானம் ஈட்டப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். காலநிலை மாற்றம் மற்றும் சந்தை ஏற்ற இறக்கம் போன்ற சவால்களை சமாளிப்பதற்கு புதுமை, நிலைத்தன்மை மற்றும் சர்வதேச கூட்டாண்மைகள் முக்கியம் என ஆளுநர் கூறினார்.
இந்த நிகழ்வில் இலங்கையின் முன்னணி விவசாயப் பொருட்களைக் காட்சிப்படுத்தும் உயர் மட்ட விவாதங்கள் மற்றும் கண்காட்சிகள் இடம்பெற்றன.