
தங்காலை நோக்கி ரஷ்சிய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்ட சென்ற பேரூந்து ஒன்று சீமெந்து லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. படு காயமடைந்த ஓட்டுனர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் 19 பேர் காயமடைந்த நிலையில் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை(17.01) தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், 138 ஆவது மைல்கல் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 30 சுற்றுலாப்பயணிகள் இந்த பேரூந்தில் பயணித்துள்ளனர்.