
போதைப்பொருள் கடத்தற்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான “பொடி லசி” என அழைக்கப்படும் ஜனித் மதுஷங்க, மும்பையில் இந்திய காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 9 ஆம் திகதி காலி உயர் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர், அடுத்த நீதிமன்ற தேதி வரை அவர் வெளிநாடு செல்ல தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வழக்கறிஞர் புத்திக மனதுங்க தெரிவித்திருந்தார்.
இருப்பினும், பிணை நிபந்தனைகளை மீறி அவர் சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, விசாரணைகளில் அவர் தற்போது இந்தியாவில் வசித்து வருவது தெரியவந்துள்ளது. இந்த நிலையியலயே அவர் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார்.