மின்சார கட்டணம் இன்று முதல் குறைவடைகிறது

மின்சார கட்டணம் இன்று முதல் குறைவடைகிறது

இன்று (17.01) முதல் மின்சாரக் கட்டணம் குறைவடையவுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சராசரியாக 20சதவீத குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளது என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜயந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த கட்டண மாற்றம் அடுத்த 6 மாதங்களுக்கு நடைமுறையில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 கூறுகளுக்கு குறைவாக பாவிப்பவர்களுக்கு 29% குறைப்பும், 31-60 வரையான கூறுகளுக்கு 28% குறைப்பும், 61-90 வரையான பாவனையை கொண்டவர்களுக்கு 19% குறைப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 91-120 வரை பாவிப்பபவர்களுக்கு 20% உம், 121-150 வரையான பாவனையாளர்களுக்கு 24% குறைப்பும் 151-180 வரையான பாவனையாளர்களுக்கு 23% குறைப்பும் வழங்கப்பட்டுள்ளது. 180 கூறுகளுக்கு மேல் பாவிப்பவர்கள் 19% கட்டண குறைப்பை அனுபவிக்கவுள்ளனர்.

பொது சேவைகளுக்கு 11% குறைப்பும், ஹோட்டல்களுக்கு 31%குறைப்பும், தொழிற்சாலைகளுக்கு 30% குறைப்பும் சமய தலங்களுக்கு 21% குறைப்பும் திருத்தத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீதி பாவனை மின்கட்டத்துக்கு 11% குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, வீட்டுப் பிரிவின் கீழ், 0-30 இற்கு இடைப்பட்ட அலகுக்கான கட்டணம் 6 ரூபாயில் இருந்து 4 ரூபாவாகவும், 31-60 இற்கு இடையில் 9 ரூபாவிலிருந்து 6 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது

Social Share

Leave a Reply