
பொது சேவைகள் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மின் கட்டண குறைப்புக்கு அரசாங்கம் ஆதரவு வழங்குமென வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். இன்று(17.01) முதல் மின்கட்டணம் குறைக்கப்படுமென பொது சேவைகள் ஆணைக்குழு அறிவித்திருந்தது. இருப்பினும் நிதியமைச்சின் ஆலோசனையின் பின்னரே கட்டணக்குறைப்பு நடைமுறைக்கு வருமென மின்சார சபை அறிவித்திருந்தது. இந்த நிலையிலேயே அமைச்சர் குமார ஜெயக்கொடி இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.