யாழில் அமைக்கப்பட்ட காலாச்சார மையத்துக்கு “திருவள்ளுவர் காலாச்சார மையம்” என பெயர்

யாழில் அமைக்கப்பட்ட காலாச்சார மையத்துக்கு "திருவள்ளுவர் காலாச்சார மையம்" என பெயர்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச்.இ.சந்தோஷ் ஜா மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி ஆகியோர் இணைந்து யாழ்ப்பாணத்தில் உள்ள கலாசார நிலையத்திற்கு ‘திருவள்ளுவர் கலாசார மையம்’ என பெயர் சூட்டுவதாக இன்று (18.01) அறிவித்துள்ளனர். திருவள்ளுவரை கெளரப்படுத்தும் முக்காக இந்த பெயர் சூட்டும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகன், வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ் மாநகர ஆணையாளர் எஸ்.கிருஷ்ணேந்திரன், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அத்தப்பத்து, துணைத் தூதரகம் யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் ஜெனரல் சாய் முரளி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிற முக்கியஸ்தர்கள் மற்றும் கலாச்சார கலைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

12 மில்லியன் அமெரிக்க டொலர் இந்திய மானிய உதவியுடன் கட்டப்பட்ட இந்த மையம், வட மாகாண மக்களின் வளமான பாரம்பரியங்கள், கலைகள் மற்றும் அபிலாஷைகள் செழிக்கக்கூடிய வாய்ப்பை இந்த மையம் வழங்குகிறது. இந்த அடையாள சின்னமான அமைப்பு, இரண்டு தளங்களைக் கொண்ட அருங்காட்சியகம்; 600க்கும் மேற்பட்டோர் அமரக்கூடிய மேம்பட்ட மேடை அமைப்புக்கொண்ட மண்டபம், 11 மாடிகளைக் கொண்ட கற்றல் கோபுரம்; ஒரு பொது மக்கள் சதுக்கம் போன்ற பல வசதிகளைக் கொண்ட ஒரு அதிநவீன வசதிகளைக் கொண்ட கட்டிட மையம் இதுவாகும்.

2015 ஆம் மார்ச் மாதம் ஆண்டு இந்தியப் பிரதமர் இலங்கைக்கு வருகை தந்த போது யாழ்ப்பாணத்திற்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயம் செய்தார். அதன் போது ​​கலாச்சார மையத்திற்கான அடிக்கல் நரேந்திர மோடியினால் நாட்டப்பட்டது. மார்ச் 2022 இல் இந்த மையம் திறக்கப்பட்டு பெப்ரவரி 2023 இல் இலங்கை மக்களது பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

இந்த முயற்சி திருவள்ளுவருக்கு கெளவரம் வழங்குவதற்கு மட்டுமல்ல என தனது உரையில் தெரிவித்த உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இலங்கை – இந்தியா நாடுகளுக்கிடையிலான வரலாறு, பகிரப்பட்ட கலாச்சாரம், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான தனித்துவமான மற்றும் பிரிக்க முடியாத பிணைப்பு ஆக்கியவற்றின் கொண்டாட்டம் எனவும் கூறினார். இந்த நிகழ்வு திருவள்ளுவரின் ஞானத்தால் வழிநடத்தப்பட்ட, கலாச்சாரம், ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட செழிப்பு ஆகியவற்றால் வளமான எதிர்காலத்தை நோக்கிய பயணத்தின் தொடக்கத்தைக் குறித்தது என்றும் திருவள்ளுவரின் போதனைகளின் உயிர்ப்புள்ள, சுவாசிக்கும் உருவகமாக இந்த மையத்தை மாற்றுமாறு உயர் ஸ்தானிகர் யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு மாகாண மக்களிடம் கோரிக்கை விடுத்தார்.

ஒரு சிறந்த பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறிய புத்தசாசனம், மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் ஹினிதுமா சுனில் செனவி, திருவள்ளுவரின் போதனைகள், நமது செயல்கள் எப்போதும் இரக்கத்திலும் நீதியிலும் வேரூன்றியிருக்க வேண்டும் என்பதை நமக்கு நினைவூட்டுவதாகவும், அவரது தலைசிறந்த படைப்பான திருக்குறள், நீதியான மற்றும் இணக்கமான சமூகத்தை நோக்கி நம்மை வழிநடத்துவதாகவும் அவர் மேலும் கூறினார். ஒரு சிறப்புச் செயலாக, திருக்குறளை சிங்களத்தில் மொழிபெயர்த்த முதல் பதிப்பின் பிரதியை இந்திய உயர் ஸ்தானிகருக்கு அமைச்சர் பரிசளித்தார்.

இந்த கலாச்சார மையத்தை இலங்கைக்கு வழங்கியமைக்கு இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க சார்பாக அமைச்சர் ஹினிதுமா சுனில் செனவி, இந்திய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தார். சிந்த கலாச்சார நடவடிக்கைகளை கட்டியெழுப்ப அனைத்து தரப்பினருடனும் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகவும் மேலும் கூறினார்.

யாழில் அமைக்கப்பட்ட காலாச்சார மையத்துக்கு "திருவள்ளுவர் காலாச்சார மையம்" என பெயர்

Social Share

Leave a Reply