கொழும்பு, கல்கிஸ்சை பகுதியில் 24 வயதான இளைஞர் ஒருவர் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் அவர் உயிரிழந்துள்ளார். இன்று(19.01) மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் இந்த துப்பாக்கி சூட்டை நடாத்தியுள்ளனர். அவர்களில் இருவர் பிஸ்டல் ரக துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏனையவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
போடியாவத்தை பகுதியை சேர்ந்த 24 வயதான நபர் காயமடைந்த நிலையில் கலுபோவில வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.