உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – மொட்டுக் கட்சியின் பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் - மொட்டுக் கட்சியின் பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் அனுராதபுரத்தில் நாளை (25.01) ஆரம்பமாகவுள்ளது.

கட்சியின் தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ரபக்ஷ தலைமையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

முதலில் ஜெய ஸ்ரீ மஹா போதி மற்றும் ருவன்வெலிசேயவிற்குச் சென்று அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரரிடம் ஆசி பெற கட்சி தீர்மானித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, கிராமப்புறத் தலைவர்களின் பங்கேற்புடன் தொடர்ச்சியான பொதுக் கூட்டங்களை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

Social Share

Leave a Reply