
19 வயது பெண் ஒருவரினால் 31 வயதான ஆண் ஒருவர் கத்தியினால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். வெல்லவாய பகுதியில் ஒரே வீட்டில் வசித்த வந்த திருமணமான 31 வயது ஆண் அவரின் 19 வயதான காதலியினால் கத்தியால் குத்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி குறித்த ஆண் மரணித்துள்ளார். இறந்தவர் நாவலப்பிட்டி பகுதியை சேந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வாடகை வீடொன்றில் வசித்த வந்த இருவருக்கும் இடையில் நேற்று(26.01) மாலை ஏற்பட்ட தகராறு காரணமாக குறித்த ஆண் தாக்கப்பட்ட நிலையில் காயம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். ஹல்துமுல்ல பகுதியை சேர்ந்த பெண் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.