
2024 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை புருனே தாருஸ்ஸலாமில்,ஆசிய பசிபிக் தகவல் தொழில்நுப்ட கூட்டமைப்பு (APICTA) நடாத்திய 2024 ஆம் ஆண்டுக்கான விருது விழாவில் இலங்கை ஒரு சிறந்த மைல்கல்லை தொட்டுள்ளது. இலங்கையின் இளம் கண்டுபிடிப்பாளர்கள் இந்த விருது விழாவில் இரண்டாம் இடத்தை பெற்ற அதேவேளை இரண்டு மெரிட் விருதுகளையும் பெற்றனர். சர்வதேச தொழில்நுட்பதுறையில் இலங்கையின் வளர்ச்சியை இது எடுத்துக்காட்டுகிறது.
இந்த சாதனையை நிகழ்த்திய மாணவர்களை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று(27.01), பிரதமர் அலுவலகத்தில் சந்தித்து அவர்களது சாதனைகளுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
ESOFT மெட்ரோ கம்பஸ் பிரதான அனுசரனை வழங்க,கல்வி அமைச்சு மற்றும் கொழும்பு பல்கலைக்கழக கணினி கற்கை நிலையம் ஆகியவற்றுடன் இணைந்து இலங்கை தகவல் தொழில்நுட்ப சம்மேளனம்(FITIS) நடாத்திய இளம் கணினி விஞ்ஞானி (YCS) போட்டிகளின் மூலம் இந்த தெரிவு செய்யப்பட்டவர்களே இந்த விருதுக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.AI- தொழில்நுட்பதிலானா வலுசக்தி சேமிப்பு திட்டம் காட்சிப்படுத்தப்பட்டது. இணைய வலையமைப்பு (IoT)-அடிப்படையிலான வினைத்திறமிக்க நீர்பாசனம் மற்றும் குறைந்த சேமிப்பு மற்றும் குறைந்த வசதியுடைய சாதனங்களுக்கான வினைத்திறன் மிக்க விளையாட்டு (games) சேவையை வழங்குவதற்கான புதுமையான படைப்பாற்றலுடன் கூடிய நுட்பத்தை அறிமுகம் செய்த்தவை ஆகியன இந்த விருது நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்ட விருதுகளை வென்றவையாகும்.
FITIS தலைவர், இந்திக டி சொய்சா, மாணவர்களின் சாதனைகளில் பெருமை கொள்வதாக தெரிவித்தார், இலங்கையை தொழில்நுட்ப சிறப்பிற்கான மையமாக நிலைநிறுத்த இளம் திறமைகளை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை அவர் வெளிப்படுத்தினார். நாட்டின் டிஜிட்டல் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இளைஞர்களின் பங்கை அங்கீகரித்து, ICT-யில் இளைஞர்களை மேம்படுத்துவதற்கும், நாட்டை டிஜிட்டல் மயமாக்கலின் இளைஞர்களது பங்களிப்பையும் அதிகரிக்க அரசாங்கம் இளைஞர்களை பலப்படுத்த முயற்ச்சிகள் எடுப்பதனையும் பிரதமர் ஹரிணி அமரசூரியா உறுதிப்படுத்தினார்.
APICTA 2024 இல் இலங்கையின் வெற்றி, அதன் இளம் கண்டுபிடிப்பாளர்களின் திறமையைக் கொண்டாடுவது மட்டுமல்லாமல், ICT துறையில் சர்வதேசஅங்கீகாரத்தை இலங்கை பெறவும், தொழில்துறையில் எதிர்கால வாய்ப்புகள் மற்றும் ஒத்துழைப்புகளுக்களை ஏற்படுத்தி தரவுள்ளது.