மலேசியாவில் நடைபெற்ற சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் 19 வயதுக்குட்பட்ட மகளிர் கிரிக்கெட் உலகக்கிண்ணத்தை இந்தியா 19 வயதுக்குட்பட்ட மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்கா 19 வயதுக்குட்பட்ட மகளிர் அணியை 9 விக்கெட்களினால் இலகுவாக வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியது இந்தியா அணி.
முதலில் துடிப்பாடிய தென்னாபிரிக்கா அணி 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 80 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பாடிய இந்தியா அணி 11.2 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 84 ஓட்டங்களை பெற்றது.