உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான மொட்டுக்கட்சியின் பிரசார நடவடிக்கைகள் ஆரம்பம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான மொட்டுக்கட்சியின் பிரசார நடவடிக்கைகள் ஆரம்பம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கிராம மட்டத்திலிருந்தான பிரசார நடவடிக்கைகள் இன்று (02.02) முதல் ஆரம்பமாகிறது.

பிரசார நடவடிக்கைகளை அனுராதபுரம், ஜெய ஸ்ரீ மகா போதியாவிற்கு அருகில் மத அனுஷ்டானங்களுடன் ஆரம்பமாகிறது.

தொடக்க விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு “நாமலுடன் கிராமம் கிராமமாக” என்று பெயரிடப்பட்டுள்ளதாக இலங்கை பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் முதல் பொது நிகழ்வு பிற்பகல் 02 மணிக்கு நொச்சியாகமவில் நடைபெற உள்ளது, அங்கு தற்போதைய அரசியல் நிலைமை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் அரசாங்கக் கொள்கைகள் குறித்து விவாதங்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட 14,000 கிராமங்களுக்கு இந்த திட்டத்தை விரிவுப்படுத்த பொதுஜன பெரமுன திட்டமிட்டுள்ளது.

Social Share

Leave a Reply