மன்னார் மீட்கப்பட்ட பெறுந்தொகையான போதைப்பொருள்

மன்னார் மீட்கப்பட்ட பெறுந்தொகையான போதைப்பொருள்

மன்னார் , மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட விடத்தல் தீவு குளப் பகுதியில் பல இலட்சம் ரூபா பெறுமதியான
கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

மன்னார்- அடம்பன் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது
போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது மறைத்து வைக்கப்பட்டிருந்த 13 பொதிகளை கொண்ட கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

சுமார் 28 கிலோ நிறையுடைய 42 லட்சம் பெறுமதியான போதைப்பொருளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply