வவுனியா வைத்தியசாலையில் வரும் வாரம் முதல் பி.சி.ஆர் இயந்திரத்தின் செயற்பாடுகள் ஆரம்பிக்கவுள்ளதக வவுனியா மாவட்ட பிராந்திய சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே வவுனியா மாவட்டத்துக்கான பி.சி.ஆர் இயந்திரம் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், அதற்கான சேவைகளை ஆரம்பிப்பதற்கான மேலதிக பொருட்கள் கொழும்பிலிருந்து வருகை தருவதனால் வரும் வாரம் இந்த சேவையினை ஆரம்பிக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா பிராந்திய சுகாதர திணைக்கள பணிப்பாளர் வைத்திய கலாநிதி மு.மகேந்திரன் கிரமமாக செயற்பட்டு இந்த சேவையினை வவுனியாவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிய வருகிறது.
தற்போது வவுனியாவில் எடுக்கப்படும் பி.சி.ஆர் மாதிரிகள் யாழ்ப்பாணம் அனுப்பி அங்கிருந்து அறிக்கை வர தாமதம் ஏற்படுகிறது. வவுனியாவிலேயே பரிசோதனைகள் ஆரம்பித்தால் விரைவில் முடிவுகள் கிடைக்கப்பெறும். அதன் காரணமாக விரைவாக சுகாதார நடவடிக்கைகளை எடுக்க முடியும்.
