பொது பாதுகாப்புக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை – அநுர

பொது பாதுகாப்புக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை - அநுர

நாட்டில் பொது பாதுகாப்புக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

கண்டியில் ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

அண்மைய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குற்றவியல் குழுக்களுக்கு இடையிலான மோதல்களின் விளைவாகும்.
அவற்றை நிவர்த்தி செய்ய உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.” என்றார்.

ஸ்திரமின்மையை ஏற்படுத்த முயற்சிப்பதாகக் கூறப்படுவது தொடர்பான தகவல்களை அதிகாரிகள் விசாரித்து வருவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply