
தொழிலதிபர் செல்லையா பொன்னுசாமியின் மறைவையொட்டி கடற்றொழில், நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது இரங்கல் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
“ஊடக சேவை மூலமாகவும், வைத்தியசேவை மூலமாகவும் நாட்டுக்கும், மக்களுக்கும சாமி என்று அழைக்கப்படும் செல்லையா பொன்னுசாமி அளப்பரிய சேவையாற்றியுள்ளார். அவரது மறைவு பெரும் கவலையை தருகின்றது.
தினக்குரல் பத்திரிகை, யாழ் தினக்குரல் பத்திரிகை, நொதேர்ன் மருத்துவனை ஆகியனவற்றின் நிறுவுனரான தொழிலதிபர் சாமி என்று அழைக்கப்படும் செல்லையா பொன்னுசாமி, வர்த்தகத்துக்கு அப்பால் சமூக மேம்பாட்டு நோக்கிலும் செயற்பட்டவர். சேவையாற்றியவர்.
தனது தனிப்பட்ட தேவைகளுக்காக ஊடக பலத்தை பயன்படுத்தியது கிடையாது. இப்படியான ஒரு மனிதரின் மறைவு பெரும் கவலையளிக்கின்றது.
தொழிலதிபராக மாத்திரமல்லாது சமூக, ஆன்மீக பணிகளையும் ஆற்றியுள்ளார். அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்டோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா இளைப்பாறட்டும்.” – என தெரிவித்துள்ளார்.