மூன்று வாரங்களுக்கு போதுமான எரிபொருள் இருப்பு உள்ளது – பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தற்போதுள்ள எரிபொருள் இருப்பு நாளை திங்கட்கிழமை காலை வரை மாத்திரமே போதுமானதாக இருக்கும் என்ற விநியோகஸ்தர்களின் கூற்றை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மறுத்துள்ளது.

நாட்டில் மூன்று வாரங்களுக்கு போதுமான எரிபொருள் இருப்பு உள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்
டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாடு முழுவதும் இன்று 1,581 முன்பதிவுகளை பெற்றுள்ளோம். இன்று ஞாயிற்றுக்கிழமை என்ற போதிலும் எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது. எனவே எரிபொருள் பற்றாக்குறை நிலவாது.

ஒகஸ்ட் மாதம் இறுதி வரை எரிபொருளுக்கான முன்பதிவுகளை செய்துள்ளோம்.

நாட்டில் எரிபொருளுக்கு பற்றாக்குறை நிலவ வேண்டுமானால் அதன் இருப்பு முடிய வேண்டும் அல்லது
எரிபொருளை முன்பதிவு செய்வதற்கான நிதி பிரச்சினை இருக்க வேண்டும்.
இந்த சிக்கல்கள் எதுவும் தற்போது இல்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply