மித்தெனிய கொலை சம்பவம் – பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது

மித்தெனிய முக்கொலை தொடர்பாக, வீரகெட்டிய பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மித்தெனிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்றால் வீரகெட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வைத்து சந்தேக நபர் நேற்று (03) மாலை கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஜுலம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்தேக நபர், துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்களுக்கு டி-56 ரக துப்பாக்கிக்கான 12 தோட்டாக்களை வழங்கியதாக தற்போது நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 18ஆம் திகதி நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் அருண விதானகமகே மற்றும் அவரது இரு பிள்ளைகள் கொல்லப்பட்டனர்.

இதன்படி, இந்தக் குற்றத்துடன் தொடர்புடையவர்களாக இதுவரை 07 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மித்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply