கைதான மேர்வின் சில்வா நீதிமன்றில் இன்று முன்னிலை

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய நடத்தப்பட்ட விசாரணைகளின் பின்னர் அவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.

கிரிபத்கொட பகுதியில் உள்ள அரச காணியொன்றைத் தனியார் நபர்களுக்குப் போலி ஆவணங்களுடன் விற்பனை செய்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் விவகார அமைச்சராக அவர் செயற்பட்ட காலப்பகுதியில் இந்த மோசடி இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply