சுகாதாரத்துறையை முக்கிய 05 விடயங்களைக் கருத்திற்கொண்டு அபிவிருத்தி செய்ய எதிர்பார்த்துள்ளதாக
சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்ற வியாழக்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதன்படி, ஆரம்ப சுகாதார அமைப்பை வலுப்படுத்துதல், இரண்டாம் நிலை மூன்றாம் நிலை மருத்துவமனை அமைப்புகளின் வளர்ச்சி
தொடர்ச்சியான மற்றும் தரமான விநியோகத்தை உறுதி செய்தல், ஊட்டச்சத்து பிரச்சினைக்குத் தீர்வு வழங்கல்
மற்றும் ஆரோக்கியத்தை உலகிற்கு எடுத்துச் சென்று அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்காக அதை ஒரு சுகாதார சுற்றுலா வணிகமாக மேம்படுத்துதல் ஆகியவற்றை பிரதானமாகக் கொண்டு சுகாதாரத்தை மேம்படுத்த முடியும் என நம்புகிறோம்” என அமைச்சர் தெரிவித்தார்.
சுகாதாரத்துறையில் வேலை வாய்ப்புகளுக்கு ஆட்சேர்ப்பு இடம்பெறும் என கூறிய அமைச்சர்
இம்மாதத்திற்குள் 976 குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் 238 பொது சுகாதார பரிசோதகர்கள், 65 மருந்து வழங்குனர்கள், 43 தொழில்சார் சிகிச்சையாளர்கள் மற்றும் 41 கதிரியக்க நிபுணர்கள் மார்ச் மாதத்திற்குள் நியமிக்கப்படுவார்கள் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஏப்ரல் மாதத்தில் 3,147 தாதியர்கள் நியமிக்கப்படுவார்கள். மேலும் 1000 சுகாதார உதவியாளர்களை
பணியமர்த்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.