முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மஹர நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
இதன்படி, எதிர்வரும் 17 ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேர்வின் சில்வா பத்தரமுல்லையில் உள்ள அவரின் இல்லத்தில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால்
நேற்று கைது செய்யப்பட்டார்.
போலி ஆவணங்களை தயாரித்து களனி பிரதேசத்தில் காணியொன்றை விற்பனை செய்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
கிரிபத்கொடை புதிய நகரத்தை நிர்மாணிப்பதற்காக 2010 ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்ட காணியாகும்.