நேற்றைய தினம் நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ஜப்னா கிங்ஸ் அணி வெற்றி பெற்றதன் மூலம் முதலிடத்தை கைப்பற்றியுள்ளது. நேற்றைய முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில் இரு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளிகள் வழங்கப்பட்டன.
தம்புள்ள ஜியன்ட்ஸ் மற்றும் கோல் கிளாடியேட்டர்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பாடிய தம்புள்ள ஜியன்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 159 ஓட்டங்களை பெற்றது. இதில் டஸூன் சாணக்க 37 ஓட்டங்களையும், ரமேஷ் மென்டிஸ் 33 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் நுவான் துஷார, நூர் அஹமட் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய கோல் கிளாடியேட்டர்ஸ் அணி 1.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 18 ஓட்டங்களை பெற்ற நிலையில் மழை குறுக்கிட்டமையினால் போட்டி கைவிடப்பப்பட்டது.
இரண்டாவது போட்டி ஜப்னா கிங்ஸ், கொழும்பு ஸ்டார்ஸ் அணிகளுக்கிடையில் 18 ஓவர்களாக குறைக்கப்பட்டு நடாத்தப்பட்டது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய ஜப்னா கிங்ஸ் அணி 18 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 207 ஓட்டங்களை பெற்றது. இதில் திசர பெரேரா 57 ஓட்டங்களையும், சொஹைப் மலிக் 44 ஓட்டங்களையும், அஷேன் பண்டார 42 ஓட்டங்களையும் பெற்றனர். சீக்குகே பிரசன்ன பந்துவீச்சில் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பாடிய கொழும்பு ஸ்டார்ஸ் அணி 15.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 114 ஓட்டங்களை பெற்றது. இதில் டினேஷ் சந்திமால் 28 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் வஹாப் ரியாஸ், மகேஷ் தீக்சன ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
இந்த வெற்றியின் மூலம் யாழ் அணி முதலிடத்தை பெற்றுள்ளது.
புள்ளி பட்டியல்
.
இடம் அணி போட்டி வெற்றி தோல்வி புள்ளி சமநிலை ஒ.நி.ச.வே
01 ஜப்னா கிங்ஸ் 4 3 1 0 6 1.778
02 கோல் கிளாடியேட்டர்ஸ் 4 2 1 1 4 0.762
03 தம்புள்ள ஜியன்ட்ஸ் 4 2 1 1 4 -0.531
04 கொழும்பு ஸ்டார்ஸ் 3 1 1 0 2 -1.580
05 கண்டி வொரியேர்ஸ் 3 0 3 0 0 -0.823
