தமிழ் பேசும் மக்களின் கட்சி தலைவர் கூட்டம்

இலங்கை அரசாங்கம் புதிய அரசியலமைப்புக்கான முயற்சிகளில் கடும்போக்கான கொள்கையை கையாண்டு, 13ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நீக்கும் முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக, தமிழ் பேசும் மக்களின் அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டாக கருத்து தெரிவித்துள்ளனர்.

கொழும்பு – வெள்ளவத்தை குளோபல் டவர் ஹோட்டலில் நேற்று (12/12) தமிழ் பேசும் மக்களின் அரசியல் கட்சித் தலைவர்கள் ஒன்றிணைந்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இணைந்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

அவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், தமிழ் பேசும் மக்களுக்கான அதிகாரங்களை பெற்றுக்கொடுக்க இந்தியா தலையீடு செய்ய வேண்டும் என்பதுடன், 13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக இந்தியாவின் தலையீட்டை கோரிய ஆவணமொன்றை இந்தியாவும் உலக நாடுகளும் வெளிப்படுத்தியிருந்தன. எனினும் அவற்றை நடைமுறைப்படுத்தும் முயற்சிகள் இன்னமும் முழுமையாகவில்லை.

மாகாண சபைகள் இயங்காதுள்ள தருணத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்தி, ஜனாதிபதி செயலணி என்ற போர்வையில் அரசாங்கம் பல்வேறு செயலணிகளை அமைத்து சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்வதற்கு எத்தனிக்கும் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றால் அரசியலமைப்பில் உள்ள அதிகாரப்பகிர்வு விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

இதற்கு மாகாண தேர்தலை இழுத்தடிப்புச் செய்வதை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது. சிறுபான்மை சமூகம் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து நாட்டின் சகல கட்சிகளுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் அதேவேளை, 13 திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இந்திய தலைமைகளுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளும் சரிவர நிறைவேற்றப்படுவதில் தாமதம் இருக்கின்றது. எனவே இவற்றையெல்லாம் தாமதப்படுத்தாது அமுல்படுத்த வேண்டும் என்;பதை வலியுறுத்துவதாக தமிழ் பேசும் அரசியல் கட்சி தலைவர்கள் ஒருமித்த கருத்தாக தெரிவித்தனர்.

குறித்த சந்திப்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், சி.விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன் எம்.பி, தர்மலிங்கம் சித்தார்த்தன எம்.பி, மனோ கணேசன் எம்.பி, ரவூப் ஹக்கீம் எம்.பி உள்ளிட்ட தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளின் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

தமிழ் பேசும் மக்களின் கட்சி தலைவர் கூட்டம்

Social Share

Leave a Reply