நாட்டில் நிலவும் டொலர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய சர்வதேச நாணய நிதியத்திடம் அதன் ஒத்துழைப்பை பெறுவதா? இல்லையா? என்பது பற்றி இன்றைய (13/12) அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது.
நாட்டில் தற்பொழுது இறக்குமதி செலவை ஈடுசெய்வதற்கும் அத்துடன் கடன் செலுத்துவதில் காணப்படும் நெருக்கடி நிலைமைகளினால், வெளிநாட்டு நாணய கையிருப்பின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெறுவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய இன்று இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் இது பற்றி ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.