வென்னப்புவ சுற்றுலா விடுதி மேம்பாட்டு திட்டம்

வென்னப்புவ பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி உட்கட்டமைப்பு வசதிகள் சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுடன் விசேட கலந்துரையாடல் நேற்று (13/12) இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில் வென்னப்புவ விடுதி உரிமையாளர்கள் குழு மற்றும் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

சுற்றுலா துறையை பாதிக்கும் பல பிரச்சினைகள் அக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதுடன், சுற்றுலா விடுதி சம்பந்தமான பகுதியில் உட்கட்டமைப்பு அபிவிருத்தி நடவடிக்கைகள் பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதன்போது அமைச்சர் பிரசன்ன ரணதுங்க,குறித்த அந்த பிரச்சினைகளை விரைவாக தீர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்தார்.

வென்னப்புவ சுற்றுலா விடுதி மேம்பாட்டு திட்டம்
வென்னப்புவ சுற்றுலா விடுதி மேம்பாட்டு திட்டம்

Social Share

Leave a Reply