இந்தியாவின் கடின இலக்கை தொட்டு வெற்றி பெற்றது இங்கிலாந்து

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகளடங்கிய டெஸ்ட் தொடரின் முதற் போட்டியில் இங்கிலாந்து, அணி 5 விக்கெட்களினால் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து லீட்ஸில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இறுதி நாளில் 371 ஓட்டங்கள் என்ற இலக்கை 5 விக்கெட்களை இழந்து துரதியடித்து வெற்றி பெற்றது.

நாளாம் நாள் நிறைவுக்கு முன்னதாக இந்தியா அணி தமது இரண்டாம் இன்னிங்சில் சகல விக்கெட்களையும் இழந்து 364 ஓட்டங்களை பெற்றது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 371 ஓட்ட வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இங்கிலாந்தில் இறுதி நாளில் இந்தளவு ஓட்டங்களை பெறுவது இலகுவானதல்ல என எதிர்பார்க்கபப்ட்டது. இந்திய அணி வெற்றி பெறும் அல்லது சமநிலை முடிவு என்ற நிலையை முறியடித்து இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இரண்டாம் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 82 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 373 ஓட்டங்களை பெற்றது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பென் டக்கட் 149 ஓட்டங்களையும், ஷக் கிரௌலி 65 ஓட்டங்களையும் பெற்றனர். இவர்களது ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டமான 188 ஓட்டங்கள் வெற்றிக்கு கைகொடுத்தது. ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் 53 ஓட்டங்களையும், ஜேமி ஸ்மித் ஆட்டமிழக்காமல் 55 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்தியா அணியின் இரண்டாம் இன்னிங்சில் 364 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. லோகேஷ் ராகுல் 137 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். ரிஷாப் பாண்ட் 118 ஓட்டங்கள். இரண்டு இன்னிங்சிலும் பாண்ட் சதம் அடித்துள்ளார். சாய் சுதர்சன் 30 ஓட்டங்கள். இத்தியா அணி இறுதி 6 விக்கெட்களை 31 ஓட்டங்களுக்குள் இழந்தது. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் ப்ரைடன் கேஸ், ஜோஷ் டொங் ஆகியோர் தலா மூன்று விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. முதல் இன்னிங்சில் இந்தியா அணி சகல விக்கெட்களைகளையும் இழந்து 471 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் யஷாஸ்வி ஜய்ஸ்வால் ஐந்தாவது சதத்தை பூர்த்தி செய்து 101 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். சுப்மன் கில் 147 ஓட்டங்களை பெற்றார். இது கில்லின் ஆறாவது சதமாகும். ரிஷாப் பாண்ட் 134 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். 209 ஓட்டங்களை இருவரும் இணைப்பாட்டமாக பெற்றுக்கொண்டனர். கில்லின் ஆட்டமிழப்போடு 41 ஓட்டங்களுக்குள் 7 விக்கெட்க்ளை இந்தியா அணி இழந்தது அவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் ஜோஸ் டொங், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 4 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

இங்கிலாந்து அணி தமது முதல் இன்னிங்சில் சகல விக்கெட்களையும் இழந்து 465 ஓட்டங்களை பெற்றது. இதில் ஒல்லி பெப் 106 ஓட்டங்களையும், ஹரி ப்ரூக் 99 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர். பென் டக்கெட் 62 ஓட்டங்களை பெற்றார். இந்தியா அணியின் பந்துவீச்சில் ஜஸ்பிரிட் பும்ரா 5 விக்கெட்களையும், ப்ரஸித கிருஷ்ணா 3 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

இங்கிலாந்து ஆடுகளங்களில் இறுதி நாளில் இந்தளவு ஓட்டங்களை நான்காம் இன்னிங்சில் பெறுவது இலகுவானதல்ல. ஆனால் பெற முடியும் என்ற நம்பிக்கையிலேயே நாணய சுழற்சியில்’
வெற்றி பெற்று இங்கிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது என்பதனை விளங்கி கொள்ள முடிகிறது.

இந்தியா அணி தோல்வியடைந்திருந்தாலும், மூன்று சிரேஸ்ட வீரர்களின் ஓய்வின் பின்னர் வெளிநாட்டு ஆடுகளத்தில் இந்த பெறுதி சிறந்தது. மீதமுள்ள நான்கு போட்டிகளில் விறு விறுப்பாக அமையுமென நம்பலாம்.

Social Share

Leave a Reply